பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments