நாரஹேன்பிட பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்!

 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி உத்தியோகபூர்வ மண்டபத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நாளை (09) வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.



அதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, பேஸ்லைன் வீதி நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதிச் சந்தி வரை கொழும்பில் இருந்து வௌியேறும் (இடதுபுறம் கிருலப்பனை நோக்கி) மருங்கு மூடப்படவுள்ள நிலையில் குறித்த வீதியில் மற்றைய மருங்கு பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிய நுழைவுப் பாதையை போக்குவரத்துக்கு இருபுறமும் பயன்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மஹவத்தை சந்தியில் இருந்து பேஸ்லைன் வீதியில் நாரஹேன்பிட்டி நோக்கி நுழைவதை கட்டுப்படுத்தி அந்த வாகனங்களை திம்பிரிகசாய வீதி மற்றும் தாபரே மாவத்தை நோக்கி திருப்பி விடுதல்.

- திம்பிரிகசாய வீதி, கிருல வீதிச் சந்தியிலிருந்து கிருல வீதிக்கான வாகனங்கள் நுழைவைக் கட்டுப்படுத்தி, அந்த வாகனங்களை ஹைலெவல் வீதியை நோக்கி திருப்பி விடுதல்.

- உத்யான வீதி ஹைலெவல் வீதிச் சந்தியிலிருந்து வாகனங்கள் நுழைவதை கட்டுப்படுத்தி அவற்றை ஹைலெவல் வீதியிலிருந்து தும்முல்ல மற்றும் கிருலப்பனை நோக்கித் திருப்பி விடுதல்.

- பேஸ்லைன் வீதி, ஹைலெவல் ரோட் சந்தியிலிருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகனங்கள் நுழைவதை கட்டுப்படுத்தி, அந்த வாகனங்களை தும்முல்ல மற்றும் நுகேகொடை நோக்கி திருப்பி விடுதல்.

- நாவல வீதி நாரஹேன்பிட வீதி நாவல சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி நோக்கி வாகனங்கள் நுழைவதை கட்டுப்படுத்தி அந்த வாகனங்களை இராஜகிரிய மற்றும் நுகேகொடை நோக்கி திருப்பி விடுதல்

- நாவல வீதி கிரிமண்டல சந்தியிலிருந்து கிரிமண்டல மாவத்தைக்குள் நுழையும் வாகனங்களை கட்டுப்படுத்தி அந்த வாகனங்களை ராஜகிரிய மற்றும் நுகேகொடை நோக்கி திருப்பி விடுதல்

Post a Comment

0 Comments