கடற்கரைக்கு செல்ல வேண்டாம்...! அமெரிக்க தூதரகம் அவசர எச்சரிக்கை



அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா (USA) தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்க தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத் தகுந்த தகவல் வந்திருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரஜைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும், பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்குச் செல்வோர் தகவல்தொடர்பு சாதனங்களை இலகுவில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்குமாறும் பரிந்துரைக்கப்படுகிறது. 

எனவே, மறு அறிவித்தல் வரையில் அமெரிக்க பிரஜைகள் அறுகம்பை கடற்பரப்பினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

எனினும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

Post a Comment

0 Comments