அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேலின் அடுத்த குறி

ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. 

இதற்கான இரகசிய திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர்.

https://garudannews24.blogspot.com/2024/10/blog-post_41.html

அமைச்சரவை முடிவு 

சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 


இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். 

தாக்குதலுக்கு பதிலடி

தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. 

இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. 

ஏற்கனவே ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. 

இது கண்டிப்பாக உலகபோராக மாறும் அபாயம் உள்ளது. 

முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது.

Post a Comment

0 Comments