முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் கருணை மனுவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (09) இடம்பெற்றுள்ளது.
ஈ.பி.டிபி. கட்சியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற சிநேகபூர்வமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், பரஸ்பர சுகநலன்கள் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 Comments